எஸ்.எஸ்.ராஜமெளலி-மகேஷ்பாபு படம் குறித்து ஆச்சரிய தகவல் அளித்த பிரபலம்!

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய பிரம்மாண்டமான படங்களை எடுத்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்தேஜா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. சுதந்திரப் போராட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை முடித்துவிட்டு எஸ்எஸ் ராஜமெளலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இந்த படம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படம் குறித்த முக்கிய தகவலை திரைக்கதை ஆசிரியரும் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் அவர்கள் கூறியுள்ளார். இந்தப்படம் ஆப்பிரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட ஒரு பிரமாண்டமான அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்திற்காக ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.

பாகுபலி மற்றும் பாகுபலி-2 படத்தை அடுத்து அதிக அளவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறும் படம் என விஜயேந்திர பிரசாத் அவர்கள் கூறியிருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்-முதல்வர் எச்சரிக்கை!

பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவை அமமுக கட்சியினர் பல இடங்களில் மரியாதை செய்து வரவேற்றனர்.

டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு: நயன் குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்

காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு விழாவாக மாறும் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்! தமிழக முதல்வர் அறிவிப்பு!

புகழ் பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிறந்த முருகப் பக்தராகவும் அறியப்பட்ட கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்