சென்னைக்கு ஏதாவதுன்னா உடனே ஓடி வந்துடுவோம். பாகுபாலி ராணா
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்தது. ஆனால் சென்னைக்கு உதவும் கரங்கள் நீண்டு கொண்டே உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் நிவாரண பொருட்களையும், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகினர்களும் சென்னைக்கு தாங்களாகவே உதவ முன்வந்தனர். பிரபல தெலுங்கு நடிகரும் 'பாகுபலி' படத்தின் வில்லனுமான ராணா இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'சென்னை எனக்கு மட்டுமல்ல, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோர்களுக்கும் முதல் வீடு. எங்களுடைய வாழ்க்கை சென்னையில்தான் தொடங்கியது. சென்னை நன்றாக இருந்தால்தான் நாங்கள் இங்கே நிம்மதியாக இருக்கும். அதனால் சென்னைக்கு ஏதாவதுன்னா உடனே ஓடி வருவோம்' என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னைக்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் 'பாகுபலி 2' படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் சென்னையில் இயல்பு நிலை திரும்பிய பின்னர்தான் தான் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு போவதாக உள்ளதாகவும் கூறினார். மேலும் அடுத்த வருடம் 'பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக் மற்றும் 'பாகுபலி' ஆகிய இரு படங்களும் வெளிவரும் என்றும் அதற்குள் சென்னை மீண்டும் பார்முக்கு திரும்பிவிடும் என தான் நம்புவதாகவும் ராணா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com