close
Choose your channels

மகேஷ்பாபுவின் 'பிரம்மோத்சவம்'. இசை வெளியீட்டு தேதி மற்றும் இடம்

Monday, March 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, சமந்தா உள்பட பலர் நடித்து வரும் 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'பிரம்மோத்சவம்' பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ்பாபுவின் முந்தைய படமான ஸ்ரீமுந்துடு படமும் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால், ப்ரணீதா சுபாஷ், சத்யராஜ், ரேவதி, சரண்யா பொன்வண்ணன், ஜெயசுதா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ஸ்ரீகாந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் மற்றும் மணிஷர்மா இசையமைக்கின்ரனர். சுமார் ரூ.75 கோடியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிவிபி நிறுவனம் மற்றும் மகேஷ்பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment