மீண்டும் இணையும் 'தெறி' ஜாம்பவான்கள்

  • IndiaGlitz, [Friday,April 22 2016]

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், ஜி.வி.பிரகாஷ், அட்லி, மகேந்திரன், கலைப்புலி எஸ்.தாணு ஆகிய ஜாம்பவான்கள் இணைந்திருந்தனர். இந்நிலையில் இவர்களில் அட்லியும் மகேந்திரனும் மீண்டும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மகேந்திரன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கவுள்ள படத்தில் அட்லி வசனம் எழுதவுள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் கூறியுள்ளார். இதன்மூலம் அட்லி-மகேந்திரன் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

அட்லியின் வசனங்கள் அர்த்தம் உள்ளவை என்பதை நேரில் உணர்ந்ததாகவும், குறைந்த வார்த்தைகளில் நிறைந்த அர்த்தம் உள்ள வசனம் எழுதும் திறமை அவரிடம் உள்ளதாகவும் மகேந்திரன் புகழ்ந்துள்ளார். நான் அவரிடம் எனது படத்திற்கு வசனம் எழுதுமாறு கூறியவுடன் ஆச்சரியம் அடைந்து ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.