சென்னை CAA எதிர்ப்பு போராட்டம்.. மஹாத்மா காந்தியின் பேரன் நேரில் வந்து ஆதரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடந்து வரும் பட்ஜெட்ட கூட்டத்தொடரில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கடந்த 14ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.
அன்றைய தினம் இரவு காவல் துறை தடியடி நடத்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த தடியடியை கண்டித்து பெண்கள், குழந்தைகள் என இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில் ஷாகீன்பாக் போராட்டத்தை போன்று அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com