பிராய்ச்சியுடன் சேர்ந்தாரா மகத்?
- IndiaGlitz, [Thursday,August 30 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத் மற்றும் யாஷிகா இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இந்த காதலை இருவருமே ஒப்புக்கொண்டனர். மகத் ஏற்கனவே பிராய்ச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இந்த புதிய காதல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்தது
இந்த நிலையில் கடந்த வாரம் மகத் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பிராய்ச்சியை மகத் சந்தித்தாரா? மகத்தை மன்னித்து பிராய்ச்சியை ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன
இந்த நிலையில் மகத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிராய்ச்சியுடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'பிராய்ச்சிதான் எனது உலகம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து மகத்-பிராய்ச்சி மீண்டும் சேர்ந்துவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர்..
ஆனால் இந்த புகைப்படம் பழைய புகைப்படம் என்றும் பிராய்ச்சி தற்போது துபாயில் இருப்பதாகவும், அவர் இந்தியா திரும்பிய பின்னரே அவரை மகத் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The love of my life! She means the world to me ??????❤️ @mishraprachi
A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on Aug 29, 2018 at 2:44pm PDT