முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் அடிதடி

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி திரைக்கதை எழுதியும் இன்று வரை அதற்கு பலனில்லாமல் உள்ளது. எனவே அடுத்தகட்டமாக இன்று போட்டியாளர்கள் அடிதடியில் இறங்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் அடிதடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் இரு அணிகளும் பரபரப்பாக விளையாடி வரும் வேளையில் மகத்துக்கும் டேனியலுக்கும் இடையே முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதன்பின்னர் அடிதடி ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமக்கு கிடைத்த அனுபவத்தின்படி புரமோஷன் அனைத்துமே நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதே காட்சிகள் நிகழ்ச்சியில் வரும்போது மொக்கையாகிவிடுகிறது. வடிவேலு கூறியதுபோல் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லை என்ற எண்ணம்தான் பார்வையாளர்களாகிய நம்க்கு ஏற்படுகிறது.