மனைவியின் கர்ப்பத்தை டெலிவரி தேதியுடன் அறிவித்த மகத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான மகத் தனது மனைவி பிராய்ச்சி கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து டெலிவரி தேதியையும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகரும், சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மகத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நீண்ட நாள் காதலியான பிராய்ச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனது மனைவி கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ள மகத், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் மகத் முத்தம் கொடுப்பது போன்று வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தனது குழந்தை இந்த ஆண்டு மே மாதம் பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments