பெற்றோரான புதிய அனுபவம்: மகத்தின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை மகத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது என்றும், ஆனால் தன்னால் இன்னும் சந்தோசத்தை நிறுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் ஆனது என்றும் 2020ல் திருமணம் ஆனது என்றும் 2021ல் தற்போது பெற்றோர்கள் ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ள மகத், குழந்தை பிறந்த இந்த 48 மணி நேரம் ஆகியும் எங்களால் மகிழ்ச்சியை நிறுத்தவே முடியவில்லை என்று கூறியுள்ளார்
குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே என்னுடைய பெற்றோர்கள் இருக்கும் ஐதராபாத்திற்கு சென்று விட்டோம் என்றும் அங்குதான் பிரசவத்திற்கு பாதுகாப்பு என்று தான் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிராச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் பிரசவம் பார்க்கும் அறையை நாங்கள் அழகுபடுத்தினோம் என்றும் குழந்தை மற்றும் எங்களுடைய திருமண புகைப்படங்களை அந்த அறையில் வைத்திருந்தோம் என்றும் குறிப்பாக அழகிய வண்ண வண்ண விளக்குகள் மற்றும் மெல்லிய இசை அந்த அறையில் இசைக்க ஏற்பாடு செய்திருந்தோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்

குழந்தை வெளியே வந்தவுடன் எங்கள் இருவரையும் அந்த குழந்தை பார்த்தது என்றும் எங்களால் ஆனந்த கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை என்றும் நாங்கள் அந்த குழந்தையை மிகவும் பாதுகாப்புடன் நல்ல முறையாக வளர்ப்போம் என்றும் மத் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு சரியான பெயரை வைக்க தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் பெயர் அறிவிப்பு மற்றும் பெயர் வைக்கும் விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை பளார் விட்ட இளைஞர் கைது!

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை கன்னத்தில் பளாரென அறைந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்: பொதுமக்கள் நேரடியாக புகாரளிக்க வசதி!

தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நர்ஸ்-ன் கவனக்குறைவு....! பச்சிளங்குழந்தையின் விரல் போன பரிதாபம்...!

செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரல் பரிதாபமாக பறிபோயுள்ளது.