மகத் நடிக்கும் அடுத்த படத்தில் சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலர் நிஜவாழ்க்கையில் சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் பெற்று பிசியாக உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட அனைவரது வாழ்க்கை நிலையும் உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

ஆனால் மகத் விஷயத்தில் அது நடக்குமா? என்பது தெரியவில்லை. யாஷிகா மீது தனக்கு காதல் என்று மகத் கூறியுள்ளார். அது ஸ்கிரிப்டாக இருந்தாலும் அவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும்போது, வெளியே வந்த பின்னரும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ரித்விகா மகத்தின் அடுத்த படம் குறித்து கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் மகத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'சிம்பு' என்று கூற அதற்கு ரித்விகா ஆச்சரியம் அடைந்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளதாக கூறினார். இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுத்த பாலியல் தொழிலாளர்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இனியும் நான் மகத்தின் காதலி கிடையாது: பிராய்ச்சி மிஸ்ரா அதிரடி அறிவிப்பு

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத், தான் யாஷிகாவை காதலிப்பதாகவும், வெளியே ஒரு பெண் தனக்காக காத்திருக்கின்றார் என்று தெரிந்தும்

சினிமாவுக்கு வரும் சிவகார்த்திகேயன் மகள்

சினிமாத்துறையில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றே. சிவாஜிகணேசனின் வாரிசுகள் முதல் விஜய்சேதுபதியின் வாரிசு வரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து திடீரென விலகிய ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர்

இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இயக்குனர் டேனி போய்லே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மகத்-யாஷிகா காதல் ஸ்கிரிப்டா? உண்மையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மகத், யாஷிகா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக நேற்று அறிவித்தனர். தனக்காக வெளியே ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று தெரிந்தும்