close
Choose your channels

குழந்தையின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்ட மகத்!

Saturday, August 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத் பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனது குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என்று பெயர் வைத்ததாகவும் மகத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் இதனை அடுத்து மகத்தின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவு செய்துள்ளார். அதில் குழந்தையின் கால்களை அவர் முத்தமிடும் புகைப்படமும் குழந்தையை பார்த்து சிரிக்கும் புகைப்படமும் உள்ளது. இந்த புகைப்படங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment