ஒரு வருட கொண்டாட்டம்: மனைவிக்கு மகத் கொடுத்த சிறப்பு பரிசு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், நடிகை பிராய்ச்சி மிஸ்ராவை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்த திருமணத்தில் சிம்பு உள்பட மகத்துக்கு நெருக்கமான பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் தான் மகத்-பிராய்ச்சி நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் முழுமை அடைந்ததை அடுத்து தனது அன்பு மனைவிக்கு மகத் ஒரு டீசர்ட் பரிசளித்துள்ளார். அதில், ‘Loving Quarantine Wife Life' என்று அவரே பெயிண்டில் எழுதி, மனைவிக்கு பரிசளித்துள்ளார்.
இந்த டீசர்ட்டை அணிந்து இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிராய்ச்சி, ’ஒரு வருடம் முடிந்துவிட்டது. இந்த ஒரு வருட வாழ்க்கை எனக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் இப்போது வீட்டுச்சிறையில் உள்ளோம் இருந்தாலும் சந்தோஷமாக உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout