மகத்-யாஷிகா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,August 22 2019]

பிக்பாஸ் இரண்டாம் சீசன் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு 'இவன் தான் உத்தமன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் மகத், யாஷிகா உள்ளனர். இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தயாரிக்கப்படுவதாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Magven இயக்கி வரும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார். இந்த படத்தை ஆர்வி பரதன் என்பவர் தயாரிக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மகத், யாஷிகா காதலிப்பதாக வதந்தி கிளம்பிய நிலையில் அதே கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: 4வது இடத்தில் '2.0' பட நடிகர்!

கடந்த சில வருடங்களுக்கு முன் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் முதல் பத்து இடங்களில் அனைவரும் ஹாலிவுட் நடிகர்களாகவே இருப்பார்கள்.

'அசுரன்' படத்தின் அட்டகாசமான இரண்டாவது லுக்!

தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'அசுரன்' திரைப்படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை 6.02 மணிக்கு வெளியாகவிருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்

அஜித்துடன் நடிக்க ஆசை, அரசியலுக்கு வருவேன்: யாஷிகா ஆனந்த் பேட்டி

யோகிபாபு நடித்த ஜாம்பி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா, தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு ஒருநாள் கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார்.

'அசுரன்' படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷனும் தொடங்கிவிட்டது.

விஜய் டிவி கொடுத்த புகார் முற்றிலும் பொய்: மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மதுமிதா, சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து