நள்ளிரவில் யாஷிகா-ஐஸ்வர்யாவுக்கு இடையில் படுத்து கொண்ட மகத்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், மற்ற உறுப்பினர்களால் கமல் முன் காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றவர் என்பதை கடந்த ஞாயிறு அன்று பார்த்தோம். அந்த பட்டத்திற்கு ஏற்பதான் அவருடைய செய்கைகளும் உள்ளது.
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நள்ளிரவில் இரட்டை தோழிகளான யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே மகத் படுத்து கொண்டதுதான் ஹைலைட். மூவரும் படுத்து கொண்டு சாதாரணமாக பேசி கொண்டிருந்தாலும் பாலாஜிக்கு ஏற்பட்ட வயிற்றெரிச்சல் அவருடைய பேச்சில் இருந்து தெரிந்தது
அதேபோல் பொன்னம்பலமும் இந்த விஷயத்தை கலாய்க்க, மகத் அவரிடம், 'சும்மா தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்க ஏன் தப்பா நினைக்கிறீங்க என்று பதிலடி கொடுத்தார்.
ஒரு பக்கம் ஷாரிக்-ஐஸ்வர்யா ஜோடி, காதல் பறவைகள் போல் திரிந்து கொண்டிருப்பதாக பிக்பாஸ் வீட்டில் வதந்தி பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மகத்-யாஷிகாவுக்கு காதல் பற்றிக்கொள்ளும் சுழல் இருப்பதாக தெரிகிறது. இவர்களில் யார் அடுத்த ஆரவ்-ஓவியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout