ரொமான்ஸ் காமெடி படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஹரிஷ் கல்யாண் - ரைசா ஜோடியாக நடித்த 'பியார் பிரேமா காதல்' படம் நல்ல வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 2 போட்டியாளர்களான மகத் மற்றும் ஐஸ்வர்யாதத்தா ஒரு படத்தில் இணையவுள்ளனர். ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு முதலில் ஜிவி பிரகாஷை தேர்வு செய்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பின்னர் மகத்- ஐஸ்வர்யா இந்த கேரக்டர்களில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதியதாகவும் இயக்குனர் பிரபுராம் தெரிவித்துள்ளார். மகத் இந்த படத்தில் வடசென்னை இளைஞராகவும், அவர் காதலிக்கும் பெண்ணாக ஐஸ்வர்யாவும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments