அட்வைஸ் பண்ண தகுதி வேண்டாமா? மகத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை. பிக்பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டர்களும் பலவிதமாக யோசித்து டாஸ்க்குகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினாலும் அவை காமெடியாகவோ அல்லது மொக்கையாகவோ மாறிவிடுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமானவர் என்று கூறப்படுபவர் மகத். கிட்டத்தட்ட வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டார். இந்த வாரம் இவர் தலைவர் என்பதால் எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பிவிட்டார். இவர் இந்த பட்டியலில் இடம்பெறும் வாரம் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் தனது சக போட்டியாளர்களுக்கு மகத் அறிவுரை கூறுகிறார். வீட்டில் இருப்பவர்களுக்கு மனிதாபிமானம் வேண்டும் என்றும், டாஸ்க்கை தனிப்பட்ட விரோதமாக கொள்ளாமல் போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் மகத் இந்த விஷயத்தை அவர் கடைபிடித்தாலே பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என்றும் சாத்தான் வேதம் ஓதுவதாகவும் மகத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

More News

விஜய்சேதுபதி, த்ரிஷாவின் போட்டியை தவிர்த்த ஆர்யா

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் இன்று 'போத' என்ற தமிழ்ப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது.

நான் கார் ஓட்டிகிட்டே தாய்ப்பால் கொடுத்திருக்கேன்: அமெரிக்க மாடலுக்கு போட்டியாக தமிழ் நடிகை

சமீபத்தில் அமெரிக்காவின் மாடல் அழகி மாரா மார்ட்டின் என்பவர் தனது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே ராம்ப்வாக் செய்தார்.

ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ச்சியாக 4வது படத்தை இயக்கும் இயக்குனர்

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்,

நயன்தாராவின் அடுத்த படத்தில் பிஜிலி ரமேஷ்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பிஜிலி ரமேஷ் டிரெண்டில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தீவிர ரஜினி ரசிகரான இவருடைய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று பல நடிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீயான் விக்ரமின் மகன் துருவ்க்கு அந்த அதிர்ஷ்டம் முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது.