பாலியல் தொல்லை தந்துவிட்டு, "மை டியர் மகளே" என பம்பிய ஆசிரியர்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் மகரிஷி பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் தான்
வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன். இவரின் பாலியல் சீண்டல்கள் குறித்து முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை ஷேர் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது,
"ஆனந்த் குறித்த புகார்களை மாணவி ஒருவர் அவருக்கு வாட்ஸ்அப்-பில் அனுப்பி சார் இது நீங்களா...? என கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியர் நீங்க நம்பறீங்களா, என்னிடம் காமர்ஸ் படித்த உங்கள் எல்லோருக்கும் என்னை பற்றி தெரியும். "மை டியர் மகளே" என்னுடைய வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வருவது கடவுளுக்கு தெரியும். நான் கொஞ்சம் ஸ்டிரிக்டாக இருப்பேன் அவ்வளவுதான். மாணவிகளை பாதுகாப்பதே வைத்திருப்பதே நான்தான். இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. கட்டாயமாக என்னிடம் படித்த மாணவிகள் இதை செய்திருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் கூறிய மாணவி,
"சார் மாணவர்கள் மீது அக்கறை என்று கூறிவிட்டு தப்பு செய்தது நீங்கதான். உங்ககிட்ட படித்தவர்களுக்கு அதைத்தான் சொல்றாங்க. இந்த கேவலமான செயலை நீங்க செஞ்சீங்கன்னு ஒத்துக்கொள்ள போறீங்களா..? என்ன பண்ண போறீங்க...? என்று கேட்டுள்ளார். இந்த ஆசிரியர், மாணவியின் உரையாடல் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனந்தன் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கக் கூடியவர். இவர் மீது பாலியல் குற்றங்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் இணைந்து குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு ஆனந்த் குறித்த புகார் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்தது. இந்த புகார் குறித்து நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் விசாரிக்கப்படும், அந்த வகையில் விசாரணை குழு அமைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments