சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார்: ரசிகர்கள் கணிப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கணித்து அதுகுறித்த கற்பனையான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
மராட்டியர்கள் கடவுள் போல் போற்றும் சத்ரபதி சிவாஜி கேரக்டரில் ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் நடிக்க வேண்டும் என்றும் அந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்க வேண்டும் என்றும் நடிகர் யாஷின் மராட்டிய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சத்ரபதி சிவாஜி தோற்றத்தில் யாஷ் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் உருவாக்கி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தை மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலுள்ள ரசிகர்களையும் யாஷ் கவர்ந்து விட்டார் என்பது இந்த போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படுமா? அதில் யாஷ் நடிப்பாரா? அந்த படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)