ஒயின் மது அல்ல… மளிகை கடையில் விற்கும் அரசு!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

ஒயின் மதுவகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில் மகாராஷ்டிரா அரசு ஒயினை சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளின் நலன் சார்ந்து அமையும் என்றும் அம்மாநில அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

நீண்டகாலமாக ஒயின் மது வகைகளுள் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் அதிகமாக விற்பனையாகி வரும் ஒயினை மதுவகையில் இருந்து விலக்கும் நடைமுறைக்கு நேற்று மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பழ உற்பத்தி சார்ந்த விஷயங்களில் அதிக லாபம் ஈட்டமுடியும். மேலும் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு இது உதவியாக இருக்கும் என்றும் அம்மாநில அமைச்சர் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்தப் புதிய உத்தரவையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1000 சதுர அடிக்கொண்ட கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வைத்து இனி ஒயினை விற்பனை செய்ய முடியும். மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் விற்பனைக்கு தடை மற்றும் மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

விவசாயிகளின் நலன்சார்ந்து சிவசேனா அரசு எடுத்திருக்கும் இந்தப் புதிய முயற்சிக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

உலகின் சிறிய வயது பணக்காரர்… 9 வயதில் ஜெட் விமானத்தில் சுற்றும் அதிசயம்!

நைஜிரியாவை சேர்ந்த 9 வயது குழந்தையே தற்போது உலகின் சிறிய வயது பணக்காரர்

மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டிகளா? ரசிகர்களை ஏமாற்றிய தகவல்!

சர்வதேசப் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில்

'நீ அந்த வீடியோவை அனுப்பு, நான் இந்த வீடியோவை அனுப்புறேன்: யாஷிகாவின் நெத்தியடி பதில்!

நடிகை யாஷிகாவிடம் வீடியோ அனுப்ப சொன்ன நெட்டிசன் ஒருவரிடம், 'நீ அந்த வீடியோவை அனுப்பினால், நான் நீ கேட்ட வீடியோவை அனுப்புகிறேன்'

கடவுள் உள்ளாடையை அளவெடுக்கிறார்… சர்ச்சை கருத்தால் சிக்கிய பிரபல நடிகை!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் பேசியிருக்கும்

மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடி கண்களா? நடிகைக்கு நாசர் எழுதிய கடிதம்!

மிரட்டியதும்,  மிரண்டுபோனது ஒரே ஜோடி கண்களா? என ஆச்சரியத்துடன் நடிகர் நாசர் பழம்பெரும் நடிகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.