சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 60 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ராய்காட் பகுதியில் உள்ள காஜல்புராவில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்று மாலை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருந்ததாகவும் அந்த வீடுகளில் 130 க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கட்டிடம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியே சென்று விட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 125 பேர் வரை அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மகாட் தொகுதியின் எம்எல்ஏ பரத் கோஹாலி நேற்று மாலை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவின் அமைச்சர் அதித்தி தாக்கரே கட்டிட இடுபாடுகளுக்குள் இருந்து இதுவரை 60 பேர் மீட்கப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் 25-30 பேர் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் கவலை தெரிவித்து உள்ளார். அதனால் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout