1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,August 14 2020]

 

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் சிறை கைதிகளுக்கும் கொரோனா பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை 1000 சிறை கைதிகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில சிறை நிர்வாகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

சிறைக் கைதிகளைத் தவிர சிறைகளில் வேலைப் பார்க்கும் அதிகாரிகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 292 சிறை அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயருவதால் கடுமையான அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

இதுவரை அம்மாநிலத்தில் 18 ஆயிரத்து 650 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிய வருகிறது. இந்திய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழகத்தில் இதுவரை 5,278 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். டெல்லி-4,153, கர்நாடகா-3,510, உத்திரபிரதேசம்- 2,230, மேற்கு வங்கம்- 2,203, ஆந்திரா-2,296, மத்தியப் பிரதேசம்-1,048, குஜராத்-2,713 என அடுத்தடுத்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

More News

இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்கறியில் கொரோனாவா??? திடுக்கிடும் தவகவல்!!!

உலகிலேயே சீனாதான் அதிகளவு இறைச்சியை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

N95 மாஸ்க்கை மின்சாரக் குக்கரில் வைத்து சுத்தப்படுத்தலாமா??? விஞ்ஞானிகளின் விளக்கம்!!!

Instant Pot, மின்சாரக் குக்கர் அல்லது ரைஸ் குக்கரின் உலர்ந்த வெப்பத்தின் மூலம் N95

உலக இடதுகையாளர்கள் தினத்தை அடுத்து தமிழ் இயக்குனரின் நெகிழ்ச்சியான பதிவு

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகம் முழுவதும் இடது கையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,. அன்றைய தினம் இடதுகை பழக்கம் உடையவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதுண்டு. 

H-1B விசாக்களில் சிறு தளர்வு– அமெரிக்க வெளியுறவுத் துறையின் புதிய அறிவிப்பு!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜுன் 22 ஆம் தேதி H-1B விசாக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்!!!

முதல்முறையாக மடித்து வைக்கும் ஸ்மாட்போனை தயாரிக்க இருக்கிறோம்