கண்ணா… நான் இருக்கேன் – பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த அவலம்

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் யவத்மால் மாகாணத்தில் உள்ள ஜிலா பரிஷத் பள்ளியில் தேர்வு எழுதும் தங்களது குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என விரும்பிய பெற்றோர்கள் செய்த வேலை தான் தற்போது அதிர்ச்சியை வரவழைத்து இருக்கிறது.

இளைஞர்களின் உதவியுடன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் பள்ளியின் மதில் சுவரினை எட்டிப்பிடித்து பிட் பேப்பர்களை பெற்றோர்களே கொடுத்திருக்கிறார்கள். அன்பு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இதையும் செய்வார்களா? என வியந்து பார்த்த யாரோ ஒருவர் இந்த அவலத்தினை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ காட்சிதான் இணையத்தில் வைரலாகி உள்ளது.

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பெற்றோர்களே இப்படி பிட் பேப்பர்களை கொடுத்து இருப்பது பெரும் கவலையை வரவழைத்து இருக்கிறது. அடுத்தத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள் இப்படி செய்யலாமா என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

நாடக காதல் குறித்து இன்னொரு திரைப்படம்: ஜிவி பிரகாஷ் பட இயக்குனர் அறிவிப்பு 

சமீபத்தில் ஜி மோகன் இயக்கிய 'திரௌபதி' என்ற திரைப்படம் நாடக காதல் குறித்த திரைப்படம் என்பதும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது

எங்கள் தலைவர் மீது ஒரு துரும்பு பட்டால்? மக்கள் நீதி மையம் எச்சரிக்கை

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.

ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் செலவழிக்க முடியாதா? கமலுக்கு நடிகை கேள்வி 

சமீபத்தில் 'இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் நேற்று கமலஹாசனை

பாஜகவில் மேலும் ஒரு பிரபல நடிகர்: ராதாரவி தகவல்

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் துறையிலுள்ள பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தம் கொட்டிய நிலையிலும் படப்பிடிப்பை தொடர்ந்து அருண் விஜய்: இயக்குனர் ஆச்சர்யம்

கோலிவுட் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் லேசான காயம் ஏற்பட்டாலே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விடும் நிலையில் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு ரத்தம்