கண்ணா… நான் இருக்கேன் – பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த அவலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் யவத்மால் மாகாணத்தில் உள்ள ஜிலா பரிஷத் பள்ளியில் தேர்வு எழுதும் தங்களது குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என விரும்பிய பெற்றோர்கள் செய்த வேலை தான் தற்போது அதிர்ச்சியை வரவழைத்து இருக்கிறது.
இளைஞர்களின் உதவியுடன் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் பள்ளியின் மதில் சுவரினை எட்டிப்பிடித்து பிட் பேப்பர்களை பெற்றோர்களே கொடுத்திருக்கிறார்கள். அன்பு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இதையும் செய்வார்களா? என வியந்து பார்த்த யாரோ ஒருவர் இந்த அவலத்தினை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ காட்சிதான் இணையத்தில் வைரலாகி உள்ளது.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பெற்றோர்களே இப்படி பிட் பேப்பர்களை கொடுத்து இருப்பது பெரும் கவலையை வரவழைத்து இருக்கிறது. அடுத்தத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள் இப்படி செய்யலாமா என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#WATCH Maharashtra: People seen climbing the boundary walls and providing chits to students, writing their class X Matriculation examination at Zila Parishad School, Mahagaon in Yavatmal district. (03.03.2020) pic.twitter.com/IqwC4tdhLQ
— ANI (@ANI) March 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout