சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு சிக்கல்! 

  • IndiaGlitz, [Friday,April 13 2018]

தமிழகத்தில் காவிரி பிரச்சனை கொளுந்துவிட்டு எரியும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என ஒருசில அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால், வேறு வழியின்றி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது

ஆனால் புனேவிலும் சிஎஸ்கே போட்டிகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே புனேவில் கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் புனே மைதானத்தை பராமரிக்க தண்ணீர் அதிகளவு செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றும் இதனால் புனேவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்றும் மகாராஷ்டிரா அரசு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த மும்பை ஐகோர்ட், 'மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் புனே மைதானத்தை பராமரிக்க போதுமான தண்ணீர் உள்ளதா? மைதானத்திற்கு தேவையான தண்ணீரை எங்கிருந்து கொண்டு வருவீர்கள் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியத்துக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஐபிஎல் நிர்வாகம் இருப்பதால் புனேவிலும் போட்டி நடப்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது.                                                          

More News

மருமகன் தீக்குளிப்பிற்கு சீமான் கட்சியினரே காரணம்: வைகோ திடுக்கிடும் குற்றச்சாட்டு

இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நெருங்கிய உறவினர் சரவண சுரேஷ் விருதுநகரில் தீக்குளித்து 80% தீக்காயத்துடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

வைகோவின் உறவினர் தீக்குளிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தொண்டர் ஒருவர் சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பரிதாபமாக பலியானார் என்பது தெரிந்ததே.

தேசிய விருதுக்கு போட்டியிட்ட தமிழ் திரைப்படங்கள் எவை எவை?

இன்று அறிவிக்கப்பட்ட 65வது தேசிய விருதுகளில் தமிழ் படங்களுக்கு நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது

சீமான் கைதை தட்டிக்கேட்ட மன்சூர் அலிகான் கைது

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிட' திரைப்படத்தில் மிகச்சிறப்பாக இசையமைத்ததற்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.