உஷார் மக்களே..! ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கை மூடியுள்ளது மஹாராஷ்டிரா அரசு.
- IndiaGlitz, [Friday,March 13 2020]
மோடி தலைமையினாலான பாஜக அரசில் இந்திய நாட்டின் பொருளாதாரமானது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. பங்குச்சந்தையில் கடந்த திங்கட்கிழமை 7 லட்சம் கோடி வரை நஷ்டம் அடைந்திருந்தது. இன்று பங்குச்சந்தையானது 3380 புள்ளிகள் சரிந்துள்ளது.
ஏற்கனவே Yes பேங்க் அதிக கடன் கொடுத்து திவாலானதால் அந்த வங்கியை RBI தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அந்த வங்கியில் பணம் போட்டவர்கள் மாதம் ரூ.50,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளிலும் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. அடுத்தது ஆக்சிஸ் வங்கி தொடங்கி 10 வங்கிகள் திவாலாகலாம் என பொருளாதார நிபுணரும் பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள சிவசேனா அரசானது தனது அரசு கணக்கினை ஆக்சிஸ் வங்கியிலிருந்து எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றியுள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பாஜகாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸின் மனைவி ஆக்சிஸ் வங்கியின் கார்ப்பரேட் பிரிவில் துணைத்தலைவராக இருந்ததால் இந்த வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது எனவும், இப்போது ஆட்சி மாற்றத்தால் வந்துள்ள சிவசேனா அரசு தனது வங்கிக்கணக்கை ஆக்சிஸில் இருந்து எஸ்.பி.ஐக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.