ஐ.பி.எல், முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க 'தடை' விதித்துள்ளதா மஹாராஷ்டிரா அரசு..?!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக அரசுகள் திணறி வருகின்றன. வைரஸானது மேலும் பரவாமல் தடுக்க உலக சுகாதார மையமானது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லா நாடுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதில் முக்கியமானது மக்கள் மொத்தமாக கூடுவதை தடுப்பது.
ஐபிஎல் போட்டியானது மார்ச் 29 தொடங்கி மே 24 வரை நடக்கப்போகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் பிரீமியர் லீக்கின் தொடக்க ஆட்டம் மஹாராஷ்டிராவில் நடக்கவிருந்த நிலையில் அதற்கான நுழைவுசீட்டு(டிக்கெட்) விற்பனையை மஹாராஷ்டிரா சிவசேனா தலைமையில் உள்ள மகா விகாஸ் அஹாதி அரசானது தடை செய்துள்ளது.
மஹாராஷ்டிராவில் சோதனைகளுக்கு பிறகு அங்கு இருவர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.பி.எல்லை ஒத்திவைக்கலாம் என மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் அறிவித்திருந்தார்.
"ஐபில் அட்டவணைகளில் எந்த மாற்றமும் இருக்காது, எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாங்கள் செய்வோம். இவை என்னவென்பது பற்றி எங்களுக்கு சரியான புரிதல் இல்லை. வைரஸ் தொற்று பற்றி எங்கள் மருத்துவ குழு மட்டுமே எங்களுக்கு தெரிவிக்கும்.
மருத்துவ குழுவானது அனைத்து மருத்துவமனைகளோடும் தொடர்பில் உள்ளது" என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout