கொரோனா வார்டில் தீ விபத்து… 10 பேர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தினால் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையின் ஐசியு பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்ட அறையில் 17 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மற்றவர்கள் தற்போது வேறு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கொரோனா வார்டில் தீ விபத்து என்பதை முக்கியப் பிரச்சனையாக கருதுகிறோம். மற்ற மருத்துவமனைகளின் நிலமையைக் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.