மீண்டும் இணைகிறது 'மகாராஜா' கூட்டணி.. விஜய்சேதுபதிக்கு இன்னொரு வெற்றிப்படமா?
- IndiaGlitz, [Wednesday,January 08 2025]
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ படம் வெறும் ரூ.30 கோடியில் தயாராகி ரூ.100 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. அதுமட்டுமின்றி சீனாவிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மற்றும் ‘மகாராஜா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஃபேஷன் ஸ்டுடியோ மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஷ்ணு விஷால் நடித்த ’நேற்று இன்று நாளை’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிக்குமார் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி, ஃபேஷன் ஸ்டுடியோ மற்றும் ரவிக்குமார் இணையும் இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.