இந்தியில் ரீமேக் ஆகிறதா 'மகாராஜா'? உரிமையை வாங்கிய பிரபல நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்த நிலையில் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்ய இருப்பதாகவும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ‘மகாராஜா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலையும் வாரி குவித்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் அவரே இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ‘மகாராஜா’ படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குவாரா அல்லது வேறு பாலிவுட் இயக்குனர் இயக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே பல நல்ல படங்களின் ரீமேக் உரிமையை வாங்கி அமீர்கான் ரீமேக் செய்து நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தையும் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பாலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout