5 மொழிகளில் வெளியாகிறது 'மகாராஜா'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. அது மட்டும் இன்றி விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற விதிக்கு ஏற்ப ஜூலை 12ஆம் தேதி ‘மகாராஜா’ திரைப்படம் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ’லட்சுமி காணாமல் போனதும், மகாராஜாவோட வாழ்க்கை தலைகீழாய் ஆயிருச்சு, தன்னுடைய வீட்டு சாமியை திருப்பிக் கொண்டு வர, மகாராஜா எவ்வளவு தூரம் போறாரு’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“Lakshmi” kaanama ponadhum, Maharaja oda vaazhka thalaikeela ayiduchu. Thannoda veetu saami ah thirupi konduvara Maharaja evlo dhooram povaru?#Maharaja is coming to Netflix on 12th July in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi! pic.twitter.com/eEN1RCMMyc
— Netflix India South (@Netflix_INSouth) July 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments