'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் இரண்டு நடிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலிலும் கூடி அவரை சந்திக்க பல மணி நேரம் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இணைந்து கொண்டிருக்கும் செய்திகள் குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம். இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘தளபதி 64’ படத்தில் மகாநதி சங்கர் மற்றும் சாய்தீனா ஆகிய இருவரும் இணைந்து உள்ளதாகவும் அவர்கள் இருவரும் இந்த படத்தில் கேங்க்ஸ்டர் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதி அர்ஜுன் தாஸ் உள்பட ஒரு ஒரு சில நட்சத்திரங்கள் வில்லன் கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மகாநதி சங்கர் மற்றும் தீனா ஆகியோர்களும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments