இவருக்கு பதில் இவர்..  விஜய் டிவியின் 'மகாநதி' தொடரில் நடிகை மாற்றம்..!

  • IndiaGlitz, [Saturday,November 09 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடைபெறும் நடிகை விலகி விட்டதை அடுத்து, அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் டிவி, விஜய் டிவி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘மகாநதி’. இந்த சீரியலில் விஜய் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுவாமிநாதன் அனந்தராமனின் முன்னாள் காதலி வெண்ணிலா என்ற கேரக்டரில் கண்மணி மனோகரன் நடித்து வந்தார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’ராகவி’ என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருவதால், ‘மகாநதி’ தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ‘மகாநதி’ தொடரில் இனி வெண்ணிலா கேரக்டரில் நடிகை வைஷாலி நடிப்பதாக தனது அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இன்று முதல் ‘மகாநதி’ குடும்பத்தில் வெண்ணிலா என்ற கேரக்டரில் இணைந்துள்ளதாகவும், உங்களுடைய அன்பு ஆதரவு எனக்கு தேவை என்றும் வைஷாலி குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை, முத்தழகு, மாப்பிள்ளை, மகராசி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்த நிலையில், தற்போது ‘மகாநதி’ தொடரிலும் வெண்ணிலாவாக சிறப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.