'மகாநதி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..

  • IndiaGlitz, [Wednesday,July 03 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகைக்கு தற்போது திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’மகாநதி’ என்பதும் இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடித்த நடிகை பார்த்திபா கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென விலகினார் என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் தற்போது இந்த கேரக்டரில் திவ்யா என்பவர் நடித்து வருகிறார்.

’மகாநதி’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபா விலகியதற்கு காரணமாக அவர் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருவதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் விலகியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘கொண்டல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட மலையாள படத்தில் பார்த்திபா நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

More News

த்ரிஷா வீட்டில் என்ன விசேஷம்? கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் வைரல்..!

நடிகை த்ரிஷா வீட்டில் விசேஷம் நடந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதியின் முதல் ரூ.100 கோடி வசூல் படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக

கீர்த்தி சுரேஷ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அட்லி? இன்னொரு பிரபல நடிகரும் கேமியோ ரோல்..!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படத்தில் இயக்குனர் அட்லி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் இதே படத்தில் இன்னொரு பிரபல நடிகரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த 'விக்ரம்' பட பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் 'விக்ரம்' படத்தின் பிரபலம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக

மருத்துவமனையில் ஷாலினி.. அருகில் அன்புடன் அஜித்.. அப்ப சர்ஜரி உண்மைதானா?

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் நேற்று திடீரென அவர் சென்னை திரும்பினார் என்பதும் தனிப்பட்ட சில பணிகளுக்காக