மேலும் 3 சர்வதேச விருதுகளை குவித்த “மகாமுனி”… இயக்குநரின் மகிழ்ச்சி டிவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மகாமுனி”. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் கடந்த 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் அவர்கள் இசையமைத்து இருந்தார். ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்ற மகாமுனி திரைப்படம் பல சர்வதேச விருது விழாக்களில் கலந்துகொண்டு இதுவரை 9 விருதுகளைப் பெற்றிருப்பதாக கடந்த மாதம் இயக்குநர் சாந்தகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
தற்போது இஸ்ரேல் மற்றும் பூடான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் போன்ற பிரிவுகளில் மேலும் 3 சர்வதேச விருதுகளை குவித்துள்ளதாக இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
நடிகர் அருள்நிதி நடித்த “மௌனகுரு” திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். இந்தப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் பின்பு “மகாமுனி“ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களிடைய வரவேற்பு பெற்ற இயக்குநராக மாறினார். அந்த வகையில் சாந்தகுமார்- ஆர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
Magamuni won 3 more International awards from Israel and Bhutan in the Best Feature Film and the Best Director Category #magamuni pic.twitter.com/uXYDWO6Bx0
— Santhakumar (@Santhakumar_Dir) July 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments