ஆர்யாவின் 'மகாமுனி' நடிகைக்கு விருது: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான ‘மகாமுனி’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மஹிமா நம்பியாருக்கு மாட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மகாமுனி திரைப்படத்தில் தீபா என்ற கேரக்டரில் மஹிமா நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார் என்பதும் அவருடைய கேரக்டருக்கு மிகச்சிறந்த விமர்சனங்கள் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட ’மகாமுனி’ திரைப்படம் 5 விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது
இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகை மஹிமா நம்பியாருக்கு துணை நடிகைக்கான விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மஹிமா நம்பியார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ’மகாமுனி’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது அறிந்து எனக்கு வார்த்தையே வரவில்லை. மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. நான் முதலில் இயக்குனர் சாந்தகுமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
“Best Supporting actress” at the International Film festival MadridIIF2021 for Magamuni.I feel so overwhelmed &emotional &I’m at a loss for words. I can’t thank you enough @santhakumar_dir ????❤️??Thank you @Arya_offl @Actress_Indhuja @StudioGreen2 pic.twitter.com/zHZgD7du86
— Mahima Nambiar (@Mahima_Nambiar) August 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments