மலேசியா தேர்தல்: 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்தது எதிர்க்கட்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி
மலேசியாவின் 222 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆட்சி அமைக்க தேவையான 112 உறுப்பினர்களை விட அதிகமாக 115 இடங்களில் வெற்றி பெற்று மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் மகதீர் முகமது விரைவில் பிரதமராக பதவியேர்கவுள்ளார். 92 வயதான இவர் பிரதமர் பதவியை ஏற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் அதிக வயதான பிரதமர் என்ற பெருமையை அடைகிறார்.
1957ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரதமராக இருந்து வரும் நஜீப் ரசாக் ஆட்சி மீது கடந்த சில ஆண்டுகளாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout