மகாபாரதத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜித் பிறந்த நாளுக்கு முன் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இன்னொரு வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்தான் 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் பீஷ்மர்' கேரக்டரில் நடித்த ஆரவ் செளத்ரி. 'விவேகம்' படத்தில் இவர் நடித்த காட்சிகளின் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்போது செர்பியாவில் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும், தான் தங்கியிருக்கும் ஓட்டலை சுற்றி பனி சூழ்ந்த மலைகள் காணப்படுவதாகவும் ஆரவ் செளத்ரி தெரிவிக்கும் வீடியோ ஒன்றும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவேக் ஓபராயுடன் இன்னொரு முக்கிய பிரபலமும் வில்லனாக ஆரவ் செளத்ரி இந்த படத்தில் நடித்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Filming for Tamil film Vivegham with Super Star Mr Ajith Kumar in Serbia . pic.twitter.com/wsDNVJyEeQ
— Arav Chowdharry (@Aravchowdharry) April 26, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com