ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் 50வது படம் என்ற இலக்கை எட்டிய ஒருசில நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் அறிவிப்பு அவருடைய பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவு காரணமாக டைட்டில் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகாவின் 50வது படத்தின் டைட்டில் 'மஹா'. இந்த படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஜமீல் இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க ஒப்புக்கொண்ட தனுஷூக்கு இயக்குனர் ஜமீல் தனது நன்றியை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
Glad to launch @ihansika 50th film title #Maha , Best wishes to team written&directed by @dir_URJameel produced by @MathiyalaganV9 @EtceteraEntert1 music composed by @GhibranOfficial @Vivek_Director pic.twitter.com/k5GK7z02Mw
— Dhanush (@dhanushkraja) August 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments