ஹன்சிகாவின் சர்ச்சை புகைப்படத்திற்கு இயக்குனர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் 'மஹா'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து பெண் சாமியார் போல் இருந்து கொண்டு புகைபிடிக்கும் வகையில் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு 'சர்கார்' பட போஸ்டர் அளவிற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் ஓரளவு எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து இந்த போஸ்டர் குறித்த விளக்கம் ஒன்றை இயக்குனர் ஜமீல் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: சாதி, மதம் என்ற அடிப்படையில் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. புதிய தனித்துவமான ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்
இந்து, முஸ்லீம் என்ற மத ரீதியில் எனது நம்பிக்கை இல்லை. மனிதத்தை மட்டுமே நான் நம்புகிறேன். எனவே சாதில், மத ரீதியில் இந்த படத்தின் போஸ்டரை பிரச்னையாக்க வேண்டாம். இவ்வாறு இயக்குனர் ஜமீல் கேட்டுக்கொண்டுள்ளார்.
???? guys,Saw all ur coments,as a director of the film my intension was 2 just create sumthing unique n not to knowingly hurt anybody's sentiments related 2 caste or religion,I believe in humanity n not in Hindu-muslim,so pls dont create caste and religion angle ?? @ihansika #Maha
— U.R.Jameel (@dir_URJameel) December 16, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout