குழந்தைகளுக்கு '24' படக்குழுவினர் தரும் மேஜிக் பரிசு

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]
சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான '24' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் வாட்ச் கான்செப்ட் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் குழந்தைகளை அதிகளவு திரையரங்குகளுக்கு வரவழைக்க '24' படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி இந்த படத்தை பார்க்க வரும் குழந்தைகளுக்கு மேஜிக் வாட்ச் ஒன்று பரிசாக அளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா தன்னுடைய 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.

More News

பிரிட்டன் இசைக்குழுவினர்களுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்னரே ஆல்பம் தயாரிப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே....

விஷாலின் 'மருது' சென்சார் தகவல்கள்

குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் அடுத்தபடமான 'மருது' திரைப்படம் மே 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைவாரா பிரபல நடிகர்?

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

முத்தையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு. விஷால் உறுதி

'குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.....

அன்னையர் தினத்தில் விஷால் செய்த மகத்தான பணி

நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்ட தினம் முதல் அவர் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி கஷ்டப்படும் பொதுமக்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை தனது சொந்த பணத்தின் மூலமும், டிரஸ்ட் மூலமும் செய்து வருகிறார். அவருடைய சமூக சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்....