-45 டிகிரி செல்சிஸில் வாழும் மனிதர்கள்? சாட்சிக்கு வெளியாகி இருக்கும் வைரல் புகைப்படம்!!!
- IndiaGlitz, [Wednesday,December 30 2020]
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலப் பருவத்தின்போது ரஷ்யாவின் சைபீரியா தலைப்பு செய்திகளில் வந்து விடுகிறது. காரணம் குளிர்காலத்தின்போது சைபீரியாவின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை -45 டிகிரி செல்சிஸை தொட்டு விடுகிறது. எலும்பை உருக்குவது போன்று இருக்கும் இந்த குளிரிலும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் டெல்லி பகுதிகளிலும் தற்போது குளிர் வாட்டி எடுகிறது. இங்கு மைனஸ்க்கு கீழ் வெப்பநிலை சென்றாலே விழிபிதுங்கி போகிறோம். ஆனால் சைபிரீயாவின் வெப்பநிலை -45 டிகிரி செல்சிஸாக இருக்கிறது. இது உண்மையில் நடுக்கத்தைத்தான் வரவழைக்கும். இந்தச் சூழ்நிலையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு சாட்சியாக ஒரு இணையதளவாசி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார்.
அதில் தான் சாப்பிட வைத்திருந்த நூடுல்ஸை அப்படியே சூடாக எடுத்து குளிரில் நீட்டுகிறார். அது சிறிது நேரத்தில் தொங்கியபடி உறைந்து போகிறது. மேலும் அவர் வைத்திருந்த முட்டையும் அந்தரத்தில் தொங்கியபடியே உறைந்து போகிறது. இந்தப் புகைப்படம் நோவோபிரிஸ்கில் எனும் பகுதியில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டு உள்ள புகைப்படம் கடும் வைரலாகி வருகிறது.
Today it's -45C (-49F) in my hometown Novodibirsk, Siberia. pic.twitter.com/EGxyrRqdE2
— Oleg (@olegsvn) December 27, 2020