'தி லெஜண்ட்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வெளியிட இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

அதேபோல் API என்ற நிறுவனம் உலக நாடுகளில் இந்த படத்தை பிரமாண்டமாக வெளியிட உரிமை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தி லெஜண்ட்’ படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை கேரளாவின் முன்னணி நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் போலவே கேரளாவிலும் பெருவாரியான திரை அரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.