களிமண் பிட்சா? இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்!

இங்கிலாந்துக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே பல மேஜிக் நிகழ்ந்து வருகிறது. காரணம் பிட்சில் படும் ஒவ்வொரு பந்தும் களிமண் புழுதியை எழுப்பி வருகிறது. அதோடு களிமண் முழுவதும் காய்ந்து இருப்பதால் பந்து ஸ்விங் ஆவதும் அதிகமாக இருக்கிறது.

இதை வைத்துத்தான் அகமதாபாத் பிட்ச் பேட்டிங்கை விட பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி முன்பே கணித்து இருந்தார் போல. 3 வேகப்பந்து விச்சாளர்களை இந்தப் போட்டிக்கு தேர்வு செய்து இருந்தாலும் அவர்களை களம் இறக்காத விராட் கோலி முதல் இன்னிங்ஸில் அக்சருக்கு வாய்ப்பு கொடுத்தார். அடுத்து அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதனால் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரன் குவிப்பை விட படு வேகமாக விக்கெட் குவிப்பு நிகழ்ந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது. ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்பு களம் இறங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வெறும் 8 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டாம் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 81 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இதனால் வெறும் 48 என்ற இலக்கை மட்டுமே இந்திய அணிக்கு விட்டுச் சென்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசிய அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் ஒரே போட்டியில் இரண்டு முறை 5 க்குமேல் விக்கெட்டுகளை வீழ்த்திய 3 ஆவது வீரர் என்ற சாதனையையும் புரிந்து உள்ளார். மேலும் அஸ்வின் இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

தற்போது 48 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட இருக்கும் இந்திய அணி 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உறுதியாக வெற்றிப்பெறும் என்றே கிரிக்கெட் ரசிர்கள் கூறி வருகின்றனர்.