'ஏகே 62' படத்தில் வில்லனாகிறாரா மகிழ்திருமேனியின் ஹீரோ?

  • IndiaGlitz, [Monday,February 20 2023]

மகிழ்ந்திருமேனியின் முந்தைய படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ’ஏகே 62’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீத் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஏகே 62’ படத்தில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் கேரக்டர் இருக்கிறது என்பதால் இந்த ப்டத்தில் பிரபல ஹீரோ ஒருவரை தான் வில்லனாக்க வேண்டும் என்று மகிழ் திருமேனி முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் அவர் இயக்கிய ’தடம்’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக மாஸ் செய்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து மீண்டும் அவர் அஜித்துடன் மோதுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘ஏகே 62 படத்தின்’ ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.