உதயநிதியின் அடுத்த படம்: நாயகி, இயக்குனர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குவது மகிழ்திருமேனி என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பு ஒன்றில், ’ரெட் ஜெயன்ட் மூவீஸின் பதினான்காவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
உதயநிதி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். இவர் மிஷ்கினின் ‘பிசாசு’, சவரக்கத்தி மற்றும் துப்பறிவாளன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்ப்து குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Work Begins #பணிகள் துவக்கம் @RedGiantMovies_ #ProductionNo14
— Udhay (@Udhaystalin) November 6, 2020
@AgerwalNidhhi #MagizhThirumeni@ArrolCorelli @dhillrajk #NBSrikanth #Ramalingam @madhankarky @teamaimpr pic.twitter.com/yZI83LgG5J
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments