ஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘டெடி’ என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவருடைய மனைவியும் நடிகையுமான சாயிஷா நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சக்தி செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மகிழ்திருமேனி குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MagizhThirumeni has completed shooting for #Teddy!! Happy to launch his acting debut! Watch out for him???? pic.twitter.com/3Lfqi3uFuH
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) November 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com