கைலாசாவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நித்திக்கு மதுரை இளைஞர் எழுதிய கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் கூறிக் கொண்டு உள்ளார். மேலும் கைலாசா நாட்டிற்கு என தனி ரிசர்வ் வங்கியை உருவாக்கி இருப்பதாக அறிவித்த அவர் சமீபத்தில் அந்நாட்டின் நாணயங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இல்லாத ஒரு நாடு குறித்து நித்தியானந்தா கூறி வரும் தகவல்களை காமெடியாக ரசிப்பதோடு மட்டுமின்றி நெட்டிசன்கள் பதில் காமெடிகளை செய்து வருகின்றனர். கைலாசா நாட்டில் ஓட்டல் தொடங்க அனுமதி வேண்டும் என ஹோட்டல் அதிபர் ஒருவரும், அங்கு விவசாயம் செய்ய விரும்புவதாக விவசாயி ஒருவரும் நித்திக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கைலாச நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த ஆசை என்று நித்தியானந்தாவுக்கு மதுரை இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை சேர்ந்த விளையாட்டு அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ’கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் எனவே கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் நித்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாத ஒரு நாட்டை இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நித்திக்கு இணையாக நெட்டிசன்கள் பதிலடி காமெடிகளை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout