மது அருந்திவிட்டு வந்த கணவர், மகளுடன் தீக்குளித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக விலகலை பின்பற்ற வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசே தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டால் எவ்வாறு சமூக விலகலை பின்பற்ற முடியும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் மேலும் பெரும்பாலான பொதுமக்கள் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரை அருகே அலங்காநல்லூரில் மது அருந்திவிட்டு வந்த கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி மகளுடன் தீக்குளித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை அருகே அலங்காநல்லூரில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் வரிசையில் நின்று மது வாங்கினார்கள். இந்த நிலையில் அலங்காநல்லூரை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண் தனது கணவர் கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்ததை பார்த்து சந்தோஷமடைந்தார். இனிமேல் அவர் குடியை மறந்துவிடுவார் என்றே நம்பினார். ஆனால் இன்று டாஸ்மாக் கடை திறந்ததும் முதல் நபராக சென்று தனது கணவர் மது வாங்கி குடித்துவிட்டு வீடு திரும்பியதால் பரமேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் 18 வயது மகளுடன் பரமேஸ்வரி தீக்குளித்தார். இதனால் பரமேஸ்வரிக்கும் அவருடைய மகளுக்கும் படுமோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து தாயும் மகளும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளைத் திறந்த முதல் நாளிலேயே இவ்வாறு ஒரு விபரீத சம்பவம் நடந்தது அலங்காநல்லூர் பகுதி மக்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் வரையிலாவது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

More News

கோயம்பேடால் குவிந்த கொரோனா நோயாளிகள்: இன்று 580 பேர்களுக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு மேல் இருந்து வரும் நிலையில் இன்றும் ஐநூறுக்கும் மேல் அதாவது 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக

மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்குமா? நடிகை ரகுல் ப்ரித்திசிங் கேள்வி

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு டாஸ்மார்க் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.

என்று தணியும் கொரோனா!!! எப்போது முடிவுக்கு வரும்??? தொடரும் கேள்விகளுக்கு விளக்கம்!!!

ஒரு பெருந்தொற்றை எப்படி அளக்கலாம் என்பதைப் பற்றிய கணக்கீட்டு வடிவத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் உருவாக்கினார்.

கடும் உணவுப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் ஏமன்: 225 மில்லியன் டாலர் நிதி வழங்கும்  அமெரிக்கா!!!

ஏமன் நாட்டில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அமெரிக்க அரசு, 225 மில்லியன் டாலர் தொகையை அவசர  உதவியாக வழங்க முன்வந்து இருக்கிறது.

'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு இரட்டை வேடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஜோதிகா நடிப்பில் பி வாசுவின் இயக்கத்தில் உருவான 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.