தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை தென்னிந்திய அளவில் தளபதியாக இருந்த நடிகர் விஜய், 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தும் அவர் காட்டும் எளிமை தான் அவரை மென்மேலும் உயர்த்தி வருகிறது. மேலும் அவர் விளம்பரம் இன்றி செய்து வரும் பல்வேறு உதவிகள் எண்ணிலடங்கா. சமூகம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் செயல்படுவதை போலவே அவரது ரசிகர்களும் அவ்வபோது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்டஉதவிகள் இதோ :
*100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள் ,
*40 சில்வர் பாத்திரங்கள் ,
*50 சில்வர் குடங்கள் ,
*10 மண்வெட்டிகள் ,
*1 கன்றுக்குட்டி
இவை அனைத்தையும் மதுரை மேலூரில் உள்ள ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA ) அவர்கள் வழங்கினார்..
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் அன்பன் ,கல்லானை தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com