தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே! அரசியல் போஸ்டர் அதிரடியில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பல ஆண்டுகளாகவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டரிலும் மோதிக்கொள்வது தெரிந்ததே. குறிப்பாக விஜய் ரசிகர்கள் விஜய்யை அடுத்த முதல்வராகவே சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
இந்த நிலையில் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களை தொடர்ந்து தற்போது சூர்யா ரசிகர்களும் அதிரடி அரசியல் போஸ்டர் களத்தில் இறங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தும் மதுரை நகரில், சூர்யாவை புரட்சியாளர் சேகுராவை போல் சித்தரித்த சூர்யா ரசிகர்கள், ‘திரையுலகை ஆண்டது போதும் தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் தமிழக சட்டமன்றத்தின் படமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சூர்யா தனது சொந்த பணத்தில் பலகோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்கள் செய்து பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com